Dindigul Accident | லாரியில் மோதிய காய்கறி வேன்.. மோசமாக முன்பக்கத்தில் சிக்கிய டிரைவர்..

x
  • விபத்தில் சேதமான வேன் - கடும் போராட்டத்திற்கு பின் ஓட்டுநர் மீட்பு.
  • திண்டுக்கல், வேடசந்தூர் அருகே காய்கறிகளை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அதன் ஓட்டுநர் கடும் சிரமங்களுக்கு பிறகு மீட்கப்பட்டார்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.ஓசூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு,காய்கறிகளை ஏற்றிச் சென்ற நிலையில், வேடசந்தூர் காக்கா தோப்பு பிரிவில், இவர் ஓட்டிச் சென்ற வேன், முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. சேதமான முன்பக்கத்தின் நடுவே சிக்கித் தவித்த அவரை, தீயணைப்பு துறையினர் கவனமாக மீட்டனர். இதில் அவரது கால், தலை பகுதிகளில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்