மு.க.முத்து உடலுக்கு தினத்தந்தி குழும தலைவர் நேரில் அஞ்சலி

மு.க.முத்துவின் உடலுக்கு தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகரும், பாடகருமான மு.க.முத்து உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு மு.க.முத்துவின் உடலுக்கு தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், மு.க.முத்துவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மு.க.முத்துவின் சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, மு.க.தமிழரசு மற்றும் செல்வி, திமுக எம்.பி.கனிமொழி ஆகியோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com