பெட்ரோல் பங்கில் தினத்தந்தி நாளிதழ் குவியும் வரவேற்பு
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட பெட்ரோல் பங்கில், தினத்தந்தி நாளிதழ் இலவசமாக வழங்கப்படுவது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோபால் என்பவருக்கு சொந்தமான இந்த பெட்ரோல் பங்கில், எரிபொருள் நிரப்புவதற்காக தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், தங்களின் வாடிக்கையாளர்கள் உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும், அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவருக்கும் தினத்தந்தி செய்தி தாள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
Next Story
