"மைக் முன்னால் புலி... மற்ற இடத்தில் எல்லாம் எலி..." - டிஐஜி வருண்குமார் சாடல்
திருச்சி மாவட்ட எஸ்.பி ஆக இருந்து டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ள வருண்குமார் குறித்து, தொடர்ந்து அவதூறான கருத்துகளை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி பாலாஜி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வருண்குமார் நேரடியாக நீதிபதி முன், ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து வருண்குமாரின் விளக்கத்தை பதிவுசெய்து கொண்ட நீதிபதி பாலாஜி, வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Next Story
