``நீங்க டிஜிட்டல் அரெஸ்ட் ஆகியிருக்கீங்க’’ - திடீர் மெசேஜ்.. அப்பாவி சென்னை பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாக கூறி சென்னையை சேர்ந்த பெண்ணிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 3-ம் தேதி திருவல்லிக்கேணியை சேர்ந்த பெண்ணை தொடர்புகொண்ட மர்மநபர்கள், அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாக கூறி பணம் பறித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் புகாரளித்த நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், மேடவாக்கத்தை சேர்ந்த முகமது யூனிஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
