Digital Census | இந்தியாவிலே முதல்முறையாக டிஜிட்டல் சென்சஸ் - சென்னையில மக்கள் கூட்டம் கூட்டமாக..
சென்னையில் ஒரே நாளில் 16,922 குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், சென்னையில் ஒரே நாளில் 16 ஆயிரத்து 922 குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களைப் பதிவேற்றம் செய்துள்ளன. இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. நேற்று முன் தினம் முதல், 31-ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே சுய கணக்கெடுப்பு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் 30-ம் தேதி வரை வீடுகள் மற்றும் குடும்பங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும் என சுய கணக்கெடுப்பை முடித்த பிறகு கிடைக்கும் பதிவு எண்ணை, வீட்டிற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் தெரிவித்தால் போதுமானது என கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து குடும்பங்களும் சுய கணக்கெடுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
