`மகளிர் உரிமைத் தொகை' பெறவில்லையா?? வெளியானது முக்கிய அப்டேட்
ஜூன் 4ந் தேதி தமிழகம் முழுவதும் 'மக்களுடன் முதல்வர் முகாம்' நடைபெற உள்ள நிலையில், அங்கு ஏற்கனவே விண்ணப்பித்த தகுதி உள்ள பெண்கள் மற்றும் விண்ணப்பிக்காமல் இருந்த தகுதியுள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 அங்கன்வாடி மையக் கட்டிடங்களை திறந்து வைத்த அவர், இதனை தெரிவித்தார்.
Next Story
