"பிரதமருக்கு நன்றி சொல்லவில்லை" திமுக எம்.எல்.ஏ - பாஜக நிர்வாகி வாக்குவாதம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு நடைபெற்ற திறப்பு விழாவில், திமுக எம்.எல்.ஏ மற்றும் பாஜக நிர்வாகி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், மேடையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவில்லை எனக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி திருவேங்கடம் என்பவர் திடீரென எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
Next Story
