டிக்டாக் பிரபலம் இலக்கியா தற்கொலை முயற்சியா?
மாடர்ன் உடையில் குத்தாட்டம்....
பட்டுப்புடவையில் குடும்ப குத்துவிளக்கு...
இன்ஸ்டா வாசிகளின் இதயக்கன்னி.....
கண்ணசைத்தால் கொட்டும் லைக்குகள்.... இடையசைத்தால் எகிறும் கமெண்டுகள்....
கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டி இளசுகளை கட்டி இழுத்த ரீல்ஸ் நாயகி...
இப்படி வீடியோ போட்டே செலபிரிட்டியாக மாறிய டிக்டாக் இலக்கியாவை தெரியாத இணையவாசிகளே இருக்க முடியாது.
ஆனால் தற்போது இலக்கியா அதிக அளவு ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தி தான் இன்று அவரின் ரசிகர்களை பதற வைத்திருக்கிறது.
27 வயதான இலக்கியா சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வீட்டை விட்டு வெளியேறி கோடம்பாக்கத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். அரைகுறை ஆடையில் இலக்கியா போட்ட ஒவ்வொரு வீடியோயும் பல பாலோயர்களின் மனதை பந்தாடியது.
இன்ஸ்டாவில் இவருக்கு 1.6 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். இதனால் பட வாய்ப்புகளும் வந்து குவிந்தது... ஆனால் அவ்வப்போது சில பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார்.
சமீப காலமாக எந்த வித வம்பு தும்புக்கும் போகாமல், ஆபாசங்களை குறைத்துக்கொண்டு புடவையிலேயே தரிசனம் கொடுக்க தொடங்கினார். மேலும் கோவில் விலாக், குக்கிங் சேனல் என ரூட்டையே மாற்றிக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் புதிதாக வீடு வாங்கி செட்டிலானார். இந்த நிலையில் தான் இலக்கியா அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டது தெரியவந்தது. மேலும் அதிக அளவில் மது அருந்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவர்கள் இலக்கியாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால் உடன் இருந்த நபர் இலக்கியாவை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளார்.
போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் யூடியூபர் இலக்கியா சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார். இதனையடுத்து நடந்தது தற்கொலை முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரிக்க தொடங்கிய போது, இலக்கியா நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் எனக்கூறியதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் தான் இலக்கியாவின் இன்ஸ்டாகிராமில் போடப்பட்ட ஒரு ஸ்டோரி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
“என்னோட சாவுக்கு ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்ராயன் தான் காரணம், என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டான், 6 வருஷமா அவன் கூட தான் இருந்தேன்... நிறையா பொண்ணுங்க கூட பழக்கம், அத கேட்டா அடிக்கிறான்... நானும் பொறுத்து பொறுத்து போனேன் என்னால முடியல, இத போட்டதுக்குமே என்ன அடி அடினு அடிப்பான்“ இப்படி அந்த ஸ்டோரியில் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்ராயன் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார் இலக்கியா. ’
ஆனால் அந்த ஸ்டோரி போடப்பட்ட சில நிமிடங்களில் அதை டெலிட் செய்துவிட்டார்.
திலிப் சுப்ராயன் தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர். இவர் அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஸ்டார்களின் திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.
இதனை தொடர்ந்து இலக்கியாவின் குற்றச்சாட்டு குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் விளக்கம் அளித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இலக்கியா கூறியது அனைத்தும் தவறானது... தனது மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் இப்படி பொய்யான செய்தியை பரவ விடுவதாகவும் கூறி உள்ளார்.
ஆடியோ.....
போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகே இலக்கியா - ஸ்டண்ட் மாஸ்டர் இடையே என்ன பிரச்சனை என்று தெரிய வரும்.
