Madurai | NTK News | நாதகவினரை தாக்கிய ஹோட்டல்காரர்கள்? மதுரையில் பரபரப்பு
நாதகவினரை தாக்கிய ஹோட்டல்காரர்கள்? மதுரையில் பரபரப்பு
மதுரைக்கு சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்த 35 பெண்கள் உட்பட நாம் தமிழர் கட்சியினரை, தனியார் உணவகத்தினர் தாக்கியதாக கூறி அப்பன் திருப்பதி காவல்நிலையம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உணவக உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கடைக்காரர்கள் பெண்களை கம்பால் தாக்கி தாலி மற்றும் நகைகளை பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாக வந்த மதுரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, போலீசாரின் பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Next Story
