தடுப்பூசியால் குழந்தை மரணமா? - காரைக்குடியில் பதறவைத்த சம்பவம்

x

தடுப்பூசியால் குழந்தை இறந்ததா? - விசாரணை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கொத்தமங்கலம் அருகே உள்ள கீழ குடியிருப்பை சேரந்தவர் அடைக்கலம், காயத்திரி தம்பதி. இவர்களின் இரண்டரை மாத குழந்தைக்கு, காரைக்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. இந்த விவகாரத்தில் குழந்தையின் இறப்பிற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில், சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்