கசிந்த பேப்பர்ஸ்.. யார் இந்த தர்மேந்திர பிரதான்?
தமிழகத்திற்கு நிதி தரமுடியாது என்பது முதல் திமுக எம்.பி-க்களை அநாகரீகமானவர்கள் என குறிப்பிட்டது வரை சர்ச்சை கருத்துகளை கூறிய தர்மேந்திர பிரதான் குறித்து தற்போது பார்க்கலாம். கடந்த 1969-ல் ஒடிசாவின் டால்சரில் பிறந்த தர்மேந்திர பிரதான், உத்கல் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். 1983-ல் பாஜகவின் மாணவரமைப்பில் சேர்ந்த அவர், எம்.எல்.ஏ, எம்.பி என படிப்படியாக முன்னேறி, 2014-ல் பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில், பெட்ரோலியத் துறை அமைச்சரானார். பின்னர் 2021-ல் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற அவர், சம்பல்பூர் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடித்தார். இவரது பதவி காலத்தில் தான், நாடு முழுவதும் பெரும் விவாதத்தை எழுப்பிய நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் நடைபெற்றது.
Next Story
