ஆண் யானையை வேட்டையாடி தந்தத்தை கடத்திய 3 பேர் கைது

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஆண் யானையை வேட்டையாடி தந்தத்தை கடத்தியதாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ஏமனூர் வனப் பகுதியில், கடந்த மார்ச் 1ம் தேதி ஆண் யானை வேட்டையாடப்பட்டு தந்தங்கள் கடத்தப்பட்டன. இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர். கொங்கரப்பட்டியை சேர்ந்த தினேஷ், விஜயகுமார், கோவிந்தராஜூ ஆகிய 3 பேரை கைது செய்து 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கிகள், கத்திகள், வெடிமருந்துகள், கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மினி சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்