சர்க்கரை ஆலை கழிவு நீரை குடித்து பறிபோன உயிர் - மக்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை
சர்க்கரை ஆலை கழிவு நீரை குடித்து பறிபோன உயிர் - மக்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கூட்டுறவு சர்க்கரை ஆலை கழிவு நீரை குடித்து பசுமாடு உயிரிழந்துள்ளது. கோபாலபுரம் கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இதன் கழிவு நீர், தடுப்பு சுவர் வழியாக கசிந்து வருவதால், விவசாய நிலங்கள், கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாப்பாத்தி என்பவரின் பசுமாடு, ஆலை கழிவுநீரை குடித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கால்நடை மருத்துவர், காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துர்நாற்றம் வீசி, நோய்த்தொற்று ஏற்படுவதால், கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
