Dharmapuri | மனைவியை கழுத்தை அறுத்து கொன்று எதுவும் தெரியாதது போல் சுற்றிய கணவன் -பதற வைத்த சம்பவம்

x

தருமபுரி மாவட்டம் அரூரில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் 4 நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த 17ஆம் தேதி குடும்பத் தகராறில் வெங்கடேஷ் என்பவர் மகாலட்சுமி என்ற தனது மனைவியை கத்தியால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தனது 2 குழந்தைகளுடன் தலைமைறைவாக இருந்து வந்த அவர், அரூர் ரவுண்டானாவில் நடந்த வாகன சோதனையில் போலிசில் பிடிபட்டார். உடலில் காயங்களுடன் இருந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிகிச்சைக்குப் பின்பு அவர் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்