மருத்துவர்கள் இல்லாமல் உடற்கூறு பரிசோதனை : தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவலம்

தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடல்கள், மருத்துவர் அல்லாத பணியாளர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவர்கள் இல்லாமல் உடற்கூறு பரிசோதனை : தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவலம்
Published on

தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை, மருத்துவர் அல்லாத பணியாளர்கள் சிலர் பிரேத பரிசோதனை செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இறந்தவர் மற்றும் கொலை செய்யப்பட்டவரின் உடலை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு நடத்தினால் மட்டுமே, அதன் பிறகு தரப்படும் மருத்துவ அறிக்கை சரியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை தலையிட்டு உண்மை நிலையை அறியவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com