தருமபுரியில் தேசிய அளவிலான சேவல் கண்காட்சி

தருமபுரி மாவட்டத்தில், முதல் முறையாக நடைபெற்ற தேசிய அளவிலான சேவல் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தருமபுரியில் தேசிய அளவிலான சேவல் கண்காட்சி
Published on

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தேசிய அளவில் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்காக தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சேவல்கள் கொண்டுவரப்பட்டன. பல நிறங்களில் மயில், வெள்ளை, காகம், பூதி நூலான், கீரி மற்றும் பொன் நிற ரக சேவல்கள் பார்வையாளகளை வெகுவாக கவர்ந்தது. போட்டியில் கலந்து கொண்ட சேவல்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக அளிக்கப்பட்டன. தருமபுரி மாவட்டத்தில் சேவல் கண்காட்சி முதல் முதலாக நடைபெறுவதால், மக்கள் ஆர்வமாக பார்த்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com