தனுஷ்கோடி பகுதியில் கடல்சீற்றம்

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தனுஷ்கோடி பகுதியில் கடல்சீற்றம்
Published on
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் பாறைகளில் மோதும் கடல் அலைகள், சுமார் 15 அடி உயரத்திற்கு எழும்புவதால், கடற்கரை ஓரங்களில் செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகளை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், பலத்த காற்று வீசி வருவதால், கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், தென்கடல் பகுதியில் இருந்து வடகடல் பகுதிக்கு இடம்பெயர்ந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com