தன்னையும், தன் மனைவி நித்யாவையும் காவல் உதவி ஆய்வாளரான மனோஜ்குமார் திட்டமிட்டு பிரித்து வருவதாக நடிகர் தாடி பாலாஜி கடந்த ஒரு வருடத்திற்கு முன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணைக்கு கடந்த 13ஆம் தேதி மனோஜ்குமார் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் ஆஜராகினர். அப்போது மனோஜ்குமார் தன்னுடைய உடல் செய்கையால் தன்னை மிரட்டியதாக தாடி பாலாஜி அப்போதே குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் தாடி பாலாஜி, மனோஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். காவல் ஆய்வாளர் குறித்த போதிய ஆதாரங்களை காவல் ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.