ரேசன் பொருட்களை கடத்தி விற்றால் சிறை - தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

ரேசன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு டிஜிபி பிரதீப்.வி பிலிப் எச்சரித்துள்ளார்.
ரேசன் பொருட்களை கடத்தி விற்றால் சிறை - தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
Published on

ஊரடங்கையொட்டி, நியாய விலைகடைகளில் இலவசமாக கூடுதலாக அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் ரேசன் பொருட்களை கள்ளசந்தைகளில் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, ரேசன் அரிசியை பதுக்கியும், கடத்தி சென்று விற்பவர்கள் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் கள்ளசந்தை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு துறை டிஜிபி பிரதீப் வி பிலீப் தெரிவித்துள்ளார். மேலும் , முககவசம், சானிடைசரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com