தாராபுரம் : தேனீக்கள் கொட்டி பக்தர்கள் காயம்

தாராபுரம் அருகே கணபதிபாளையத்தில் தேனீக்கள் தாக்கியதில் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.
தாராபுரம் : தேனீக்கள் கொட்டி பக்தர்கள் காயம்
Published on
தாராபுரம் அருகே கணபதிபாளையத்தில் தேனீக்கள் தாக்கியதில் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். கணபதிபாளையம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்காவடி செலுத்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமராவதி ஆற்றுக்கு சென்றனர். ஆற்றுப்பாலத்தின் கீழ் இறங்கிய போது அடிப்பகுதியில் கூடுகட்டியிருந்த தேனிக்கள் பக்தர்களை கொட்டியது. இதில் காயம் அடைந்த பக்தர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com