Annamalaiyar temple || அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்திற்காக தி.மலையில் திரண்டு குவிந்த பக்தர்கள்

x

விடுமுறை தினம் என்பதால் அண்ணாமலையார் கோவிலில் குவிந்துள்ள பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வார விடுமுறையையொட்டி அண்ணாமலையார் கோவிலில் அலை மோதும் பக்தர்கள்-2 கிலோ மீட்டர் தூரம் கோவிலுக்கு வெளியே அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம்-உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிங்களில் இருந்து அண்ணாமலையார் கோயில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான வெளி மாநில குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் நுழைவு வாயில் வழியாக நீண்ட வரிசையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.

முன்னதாக திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் ஆகியோருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருப்பதால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்