கூத்தனுர் சரஸ்வதி கோவிலில் குவியும் பக்தர்கள்...

திருவாரூர் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோவிலில், விஜயதசமியையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே, கல்வி கடவுளான சரஸ்வதிக்கென தனி கோயில், திருவாரூரை அடுத்த கூத்தனூரில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வரும் நிலையில், விஜயதசமியையொட்டி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, நெல்லில் எழுத வைத்து வழிபட்டு வருகின்றனர். மாணவ மாணவிகளும் தாமரை மலர்களுடன் தங்களுடைய புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்களை சரஸ்வதி அம்மன் அருகில் வைத்து வழிபடுகின்றனர். விஜயதசமியையொட்டி, சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com