Thiruvannamalai railway station || தி.மலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்..அலைமோதும் கூட்டம் - வைரலாகும் வீடியோ
Thiruvannamalai railway station || தி.மலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்..அலைமோதும் கூட்டம் - வைரலாகும் வீடியோ
ஆடி மாத பௌர்ணமி நேற்று மதியம் 2.43 மணிக்கு தொடங்கி இன்று மதியம் 2.18 மணி வரை உள்ள நிலையில் நேற்று காலை முதலே வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் என 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பாக பக்தர்கள் கற்பூரம் ஏற்றி அண்ணாமலையாரை வணங்கி 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர்.பின்னர் இன்று காலையில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.அப்போது ரயில் வந்தவுடன் அதில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர். இது போன்ற பௌர்ணமி நாட்கள் தென்னக ரயில்வே ரயில்களில் கூடுதல் பெட்டிகள் மற்றும் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
