Kumbakonam| தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் -நாகேஸ்வரசுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள்

தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் -நாகேஸ்வரசுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள்

தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் - நாகேஸ்வரசுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள் #Kumbakonam #temple #thanthitv கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காவிரித் தென்கரைத் தலங்களில் 27-வது தலமாகவும், நாகதோஷ பரிகாரத் தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் கந்தசஷ்டி விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக சுப்பிரமணிய சுவாமிக்கும் தேவசேனா அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் வேத பாராயணங்கள் நடைபெற்றன. திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள்பெற்றுச் சென்றனர்.

X