தனிசன்னதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜா - வாஞ்சி நாதர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்

திருவாரூர் மாவட்டம் வாஞ்சி நாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. கோவிலில் உள்ள குப்த கங்கை திருக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.

முன்னதாக அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு வள்ளி,தேவசேன சமேத முருகப்பெருமான், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் நான்கு வீதிகளில் வலம் வந்து நடவாகன மண்டபத்தில் எழுந்தருளினர். அக்கோவிலில் தனிசன்னதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜா மற்றும் சித்திர குப்தனையும் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com