"சில்லஹல்லா காவடி" ஏந்தி பக்தர்கள் கொட்டும் மழையில் நூதன போராட்டம்
உதகை அருகே சில்லஹல்லா நீர் மின்னேற்ற திட்டத்தை எதிர்த்தும், அன்னமலை முருகன் கோவிலை பாதுகாக்க வலியுறுத்தியும் பக்தர்கள் நூதன முறையில் காவடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திரைப்பட பின்னணி பாடகர் பெள்ளி ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சில்லஹல்லா நீர் மின்னேற்ற திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் அன்னமலை முருகன் கோவில் மலைக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
Next Story