தேவேந்திரகுல வேளாளரை ஓ.பி.சி-யில் சேர்க்க வேண்டும் : புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை

தேவேந்திர குல வேளாளர் இனத்தவரை, பட்டியல் இனத்தில் இருந்து மாற்றி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்து அரசாணை வெளியிடுமாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவேந்திரகுல வேளாளரை ஓ.பி.சி-யில் சேர்க்க வேண்டும் : புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை
Published on

தேவேந்திர குல வேளாளர் இனத்தவரை, பட்டியல் இனத்தில் இருந்து மாற்றி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்து அரசாணை வெளியிடுமாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இதற்காக போராடி வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்டம் தோறும் மாநாடு நடத்த இருப்பதாகவும் பட்டியல் இனத்தில் இருந்து செல்வதால், எந்த இழப்பும் ஏற்படாது எனவும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com