'தேவர்' சமுதாய வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்

'தேவர்' சமுதாய வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்
Published on

கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவர் சமுதாயம் என அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் சமூகம் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனை நடைமுறைப்படுத்தவில்லை என வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் ஸ்டாலின் தொடர்ந்த மேல்முறையீடு மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com