ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை

தேவகோட்டை அருகே ஊரணியை சுத்தம் செய்த போது இரண்டரை அடி உயர ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை
Published on
தேவகோட்டை அருகே ஊரணியை சுத்தம் செய்த போது இரண்டரை அடி உயர ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஊரணி உள்ளது . நீண்ட நாட்களாக ஊரணி சுத்தப்படுத்தப் படாததால் அசுத்தமாக காட்சியளித்தது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் மாணவர்கள் 250க்கும் மேற்படோர் ஊரணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டரை அடி உயரம் உள்ள ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com