முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அவமதிப்பு
கருணாநிதி சிலையை அவமதித்த மர்ம நபர்கள்
சேலம் அண்ணா பூங்கா முன்பு நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மீது தார் ஊற்றி மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.
இது குறித்து சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலை மீது தார் ஊற்றியது யார்? காரணம் என்ன? என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
