" 142 அடிக்கு கீழ் குறைக்க முடியாது" - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு, கேரள அரசு விடுத்த கோரிக்கைக்கு, தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
" 142 அடிக்கு கீழ் குறைக்க முடியாது" - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம்
Published on

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு, கேரள அரசு விடுத்த கோரிக்கைக்கு, தமிழக அரசு பதில் அளித்துள்ளது. குமுளியில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்,

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கீழ் குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அணை முழு பலமாக இருப்பதால், தற்போது, 13 மதகுகள் மூலம் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டி விட்டதால் வருகிற 20 ம் தேதி, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com