தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த பாலு மற்றும் தங்கவேல் ஆகியோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கெங்குவார்பட்டி சேர்ந்த லட்சுமி மற்றும் விஜயன் ஆகிய இருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் காய்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.