

டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த நிலையில், சுகாதார நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி, பொது மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்த கோபுவின், மனைவி சத்யாதேவிக்கு, 10 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சத்யாதேவிக்கு, டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில், அவர் உயிரிழந்தார். இந்நிலையில், உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பொதுமக்கள் தரங்கம்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை டி.எஸ்.பி.வெள்ளத்துரை சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.