``மூச்சே திணறுகிறது’’ - ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து ஒலிக்கும் மக்களின் குமுறல்..
ஸ்ரீபெரும்புதூர் அருகே குன்னம் பகுதியில் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதால் அந்த பகுதியில் தொழிற்சாலை கழிவுகளை எரிப்பதை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. குன்னம் பகுதி ஏரி, குளம் உள்ளிட்டவையில் சிலர் ரசாயன கழிவுகளை எரிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திலும், ஊராட்சியிலும் புகார் அளிப்பவர்கள் மிரட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே, நீர்நிலைகளை மாசுபடுத்துவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
