TN Rains | டெல்டாவுல சும்மா அடிச்சு பொளக்குது - உள்ளே நுழைந்ததுமே இறங்கி அடிக்கும் பருவமழை
டெல்டாவுல சும்மா அடிச்சு பொளக்குது - உள்ளே நுழைந்ததுமே இறங்கி அடிக்கும் பருவமழை
#deltarains #tnrains #thanthitv
நாகையில் மூன்றாவது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு, திருப்பூண்டி, கீழ்வேளூர், நாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையோரங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேவேளையில், சம்பா, தாளடி சாகுபடிக்குத் தேவையான மழை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
