Deliveryboy | CHENNAI | டெலிவரி பாய்க்கு நேர்ந்த கொடூரம் சிக்கிய ரவுடிகள்
டெலிவரி பாய்க்கு நேர்ந்த கொடூரம் சிக்கிய ரவுடிகள்
டெலிவரி ஊழியரை மிரட்டிப் பணம் பறிப்பு - 2 ரவுடிகள் கைது சென்னை நுங்கம்பாக்கத்தில், நள்ளிரவில் உணவு டெலிவரி ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்த இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். முகப்பேரைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் என்ற ஊழியர், கடந்த 20-ஆம் தேதி பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி 2 ஆயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் பேரில், நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார்த்திக், ரோஷன் ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தியும், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
