டெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கு : கைதான 2 பேர் திருச்சி சிறையில் அடைப்பு

கும்பகோணத்தில், வட மாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அவரை ரயில் நிலையத்தில் இருந்து கடத்திய ஆட்டோ ஓட்டுனரை போலீஸார் தேடி வருகின்றனர்.
டெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கு : கைதான 2 பேர் திருச்சி சிறையில் அடைப்பு
Published on

கும்பகோணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் வங்கி பணி பயிற்சிக்காக, டெல்லியில் இருந்து வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் கைதான தினேஷ், வசந்த் இருவரும் காலில் காயம் காரணமாக, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனை முடிந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பரபரப்பான இந்த வழக்கில் அந்தப் பெண்ணை ரயில் நிலையத்தில் இருந்து கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com