

டெல்லியில் பிரபலமான தொழிலதிபர் என்ற அடையாளத்துக்கு சொந்தக்காரர் நீரஜ் குப்தா. 45 வயதான இவருக்கு, தன் நிறுவனத்தில் வேலை பார்த்த பைசல் என்ற 29 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.
ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்தாலும் கூட பைசலும், குப்தா உடனான உறவை தொடர்ந்துள்ளார் பைசல். ஒரு கட்டத்தில் பைசலுக்கு ஜூபர் என்ற இளைஞருடன் காதல் ஏற்படவே, அவரை திருமணம் செய்யவும் திட்டமிட்டார்.
இந்த விவகாரம் நீரஜ் குப்தாவுக்கு தெரியவரவே, அவர் தன் காதலியை கண்டித்துள்ளார். தன்னை மீறி யாரையும் திருமணம் செய்யக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பைசல், அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார்.