திரிணாமூல் MP... பாஜக எம்.பி மாறி மாறி அட்டாக்... அரசியல் அனலில் தகிக்கும் டெல்லி
நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜமீன்தார் போல் செயல்படுகிறார் என்று, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி எம்.பி.க்களை மதிப்பதில்லை என்றும், பாஜக எம்.பி.க்கள், பிரதமர் மற்றும் துணை பிரதமரைப் போல் செயல்படுவதாகவும் விமர்சித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக எம்.பி நிஷிகாந்த் தூபே, கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக இருந்த அஜெண்டா, எதிர்கட்சிகளின் கோரிக்கையை அடுத்தே ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சினை செய்து, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.
Next Story
