நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் கைது

நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் கைது
Published on
நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமூகவலைதளத்தில் பாஸ்கர் என்பவர் தம்மை எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் மகன் என தெரிவித்து கொண்டு வெளியிட்டுள்ள வீடியோவில் நீதித்துறையை அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிஜெயபால் என்ற வழக்கறிஞர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் பாஸ்கரை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com