Deface Hindi Case | ரயில் நிலையத்தில் இந்தி எழுத்தை அழித்த 7 பேருக்கு தண்டனை

x

இந்தி எழுத்து அழிப்பு - 7 பேருக்கு ரூ.2000 அபராதம்

நெல்லை பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்த வழக்கில் திமுக மாநில நிர்வாகி உள்ளிட்ட 7 பேருக்கு ஒரு மாத சிறை அல்லது தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் என தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார். மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழக முழுவதும் திமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட போது, நெல்லை ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ராஜ வர்மன் உள்ளிட்ட ஏழு பேர் கருப்பு மையால் அழித்ததை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்