மான் வேட்டை - தப்பிச் செல்ல முயன்ற 3 பேர் கைது
ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் காப்புக் காடுகளில் மான் வேட்டையாடிய 3 பேர் பிடிபட்டனர். தென்காசி மாவட்டம் ஊத்துமலை காப்புக்காட்டில் மானை வேட்டையாடிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, கார் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. அவர்களைப் பிடித்த போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட மான், துப்பாக்கி, கத்தி, டார்ச் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மானை வேட்டையாட 3 கார்களில் 10க்கும் மேற்பட்டோர் வந்தது தெரியவந்துள்ளது.
Next Story
