சென்னையை பதறவைத்த தீபா மரணம் - கையில் குழந்தையுடன் தாய் கொடுத்த கண்ணீர் பேட்டி

x

மாநகராட்சி அலட்சியமே இறப்புக்கு காரணம்- தீபாவின் தாயார் குற்றச்சாட்டு

சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தீபா என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மாநகராட்சியின் அலட்சியமே தீபாவின் இறப்புக்கு காரணம் என பெண்ணின் தாயார் குற்றம்சாட்டி உள்ளார். தீபாவின் சடலத்தை மீட்ட போலீசார், அவரது கைகள் கட்டப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.மேலும் கொலையாக இருக்குமோ என்கிற கோணத்தில் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இறந்த பெண்ணின் தாயார், அவர் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்துள்ளதாகவும், மாநகராட்சியின் அலட்சியம் தான் இதற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்