Soap | சோப்பு நிறுவனங்கள் எடுத்த முடிவு - மக்களுக்கு அடுத்த பேரதிர்ச்சி
#soap #soaprate #soapmaking சோப்பு விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்த முடிவு மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததால், சோப்பு விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்த தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கோவையை தலைமையிடமாகக் கொண்ட சோப்பு தயாரிப்பு தொழிற்சாலை நிறுவனர் சுவராஜ் தெரிவிக்கையில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறினார். ஒரு கிலோ 120 ரூபாயாக இருந்த மூலப்பொருட்கள் தற்போது 380 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாகவும் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சோப்பு விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
