உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்.. ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

x

அசாமில் ராணுவ வீரர் மரணம்-சென்னையில் அஞ்சலி

அசாம் பகுதியில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த

சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் நெஞ்சு வலி காரணமாக மரணமடைந்த நிலையில் அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் ராணுவ வீரரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜெகநாதன் அசாம் எல்லை பகுதியில் பணியில் இருந்த பொழுது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார். இதனையடுத்து சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு அவரின் மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்