கடன் தொல்லையால் நண்பர்கள் தற்கொலை : அவரவர் வீட்டில், ஒரே சமயத்தில் துயர முடிவு

மயிலாடுதுறையில், நிதி நிறுவனம் நடத்தி வந்த நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடன் தொல்லையால் நண்பர்கள் தற்கொலை : அவரவர் வீட்டில், ஒரே சமயத்தில் துயர முடிவு
Published on

மயிலாடுதுறையில், நிதி நிறுவனம் நடத்தி வந்த நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காமராஜர் சாலையைச் சேர்ந்த சரவணன், சந்திரசேகரன் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். நண்பர்களான இவர்கள், வட்டிக்கு பணம் வாங்கி, தொழில் நடத்தி வந்த நிலையில், பல கோடி ரூபாய் கடன் ஏற்பட்டது. இந்த நிலையில், இவர்கள் இருவரும், அவரவர் வீட்டில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து, மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com