ஏலச்சீட்டு நடத்தியதில் கடன் - தாய், தந்தை, மகன் தற்கொலை

ஏலச்சீட்டு நடத்தியதில் கடன் - தாய், தந்தை, மகன் தற்கொலை
Published on

என்.புதூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை, கலா தம்பதியின் மகன் சிவா, அதே ஊரைச் சேர்ந்த பலரிடம் தீபாவளி ஏலச்சீட்டு நடத்துவதாக பணம் வசூல் செய்துள்ளார். இதனால் கடன் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீபாவளி நெருங்கி வருவதால், சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டால் என்ன செய்வது என தெரியாமல் மூவரும் தவிப்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சிவா மற்றும் அவரது தந்தை சின்னதுரை, தாய் கலா ஆகிய மூவரும் அவர்களது வீட்டிலேயே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரின் தற்கொலைக்கு காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com