ஆய்வு செய்த அதிகாரிகள் மீது தாக்குதல்,கொலை மிரட்டல் : வரம்பு மீறி செயல்பட்ட நில ஆக்கிரமிப்பாளர்

திருப்புவனம் அருகே அறநிலையத்துறை துணை ஆணையர் மீது தாக்குதல் நடத்தியதோடு, நில ஆக்கிரமிரப்பாளர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வு செய்த அதிகாரிகள் மீது தாக்குதல்,கொலை மிரட்டல் : வரம்பு மீறி செயல்பட்ட நில ஆக்கிரமிப்பாளர்
Published on
ஜாதி புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள மதுரை ஆதினத்திற்கு சொந்தமான ஆயிரத்து 200 ஏக்கர் நிலத்தை எம்.கே.ஆர்.சண்முகம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அறநிலையத்துறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை அறிந்து அங்கு வந்த நில ஆக்கிரமிப்பாளர், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். அதிகாரிகளை தாக்கியதோடு மட்டுமின்றி துப்பாக்கியால் சுட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கிடையே, காயமடைந்த துணை ஆணையர் ராமசாமி, திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com