madurai | murder | death மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை நடுநடுங்கவிட்ட அரிவாள்வெட்டு பகீர் பிண்ணனி

death மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை நடுநடுங்கவிட்ட அரிவாள்வெட்டு பகீர் பிண்ணனி

madurai | murder | death மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை நடுநடுங்கவிட்ட அரிவாள்வெட்டு பகீர் பிண்ணனி #madurai #death #murder மதுரை, சோலையழகுபுரம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சப்பாணி சரவணன். இவர் ஒத்தக்கடை கணேசன் என்ற ரௌடி கும்பலை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.கடந்த 2001 ஆம் ஆண்டு மதுரை மேலமாசி வீதி பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.புஷ்பராஜின் மகன் பாலமுருகன் 7 வயதாக இருக்கும்போதே தந்தை படுகொலை செய்யப்பட்ட நிலையில், தனது தந்தையை கொன்ற நபர்களை பழி வாங்கவேண்டும் என அவர் நினைத்துள்ளார்.இதனால் அவரது தந்தை கொலை வழக்கில் தொடர்புடைய சப்பாணி சரவணனை கொலை செய்ய திட்டமிட்டு அவரை பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே உள்ள டீ கடைக்கு சென்ற சப்பாணி சரவணனை பின் தொடர்ந்து வந்த பாலமுருகன் தலைமையிலான கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயங்களுடன் தப்பியோட முயன்றபோதும் அந்த கும்பல், சப்பாணி சரவணனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 24 மணி நேரத்திற்குள் புஷ்பராஜின் மகன் பாலமுருகன் அவரது நண்பர்கள் பேய் மணிகண்டன், வினோத் முத்தையா, திலீப் குமார், உள்ளிட்ட 12 பேரை கைது செய்துள்ளனர்.தனது தந்தையை கொலை செய்ததற்கு பழிவாங்குவதற்காக 25 ஆண்டுகள் காத்திருந்து சப்பாணி சரவணனை, புஷ்பராஜின் மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com